ஆஸ்திரேலியாவில் நடந்த பயங்கரம் இலங்கையில் இருந்து சென்றவர் பலி
அவுஸ்திரேலியா சிட்னி வணிக வளாகத்தில் இடம்பெற்று கத்திக் குத்து தாக்குதலில் உயிரிழந்தவர் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.
குறித்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியா சென்ற பாகிஸ்தான் அகதி ஒருவரும் அடங்குவதாக தெரியவந்துள்ளது.
போண்டி சந்தி வெஸ்ட்பீல்டில் பாதுகாவலராகப் பணியாற்றிய 30 வயதான முன்னாள் அகதி, கடந்த சனின்கிழமை நடந்த கொடூரமான கத்திக்குத்துத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய கத்திக் குத்து
இலங்கையில் இருந்து ஒரு வருடத்திற்கு முன்னர் அவுஸ்திரேலியா 30 வயதான பராஸ் தாஹிர் என்பவரே உயிரிழந்துள்ளார்.
பராஸ் ஆஸ்திரேலியாவின் அஹ்மதியா முஸ்லீம் சமூகத்தின் மதிப்புமிக்க உறுப்பினர் மட்டுமல்ல, அஹ்மதியா முஸ்லிம் இளைஞர் அமைப்பின் தொண்டு முயற்சிகளிலும் தீவிரமாக பங்களித்தார் என தெரியவந்துள்ளது.
எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் இந்த கடினமான நேரத்தில் பராஸின் குடும்பத்தினருடனும் அன்புக்குரியவர்களுடனும், உள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
Reviewed by Author
on
April 15, 2024
Rating:


No comments:
Post a Comment