யாழில் நோயை குணப்படுத்த கிறிஸ்தவ சபையில் சிகிச்சை பெற்று வந்த ஆசிரியை பரிதாபமாக பலி
>யாழ்ப்பணம் - இளவாலைப் பகுதியில் தீரா வயிற்று வலிக்கு கிறிஸ்தவ சபை ஒன்றில் சிகிச்சைபெற்று வந்த பெண் ஒருவர் நேற்று (14.04.2024) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
38 வயதான ஆசிரியை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்தப் பெண் வயிற்றில் ஏற்பட்ட நோய்க்காக யாழ்ப்பாணம் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நோய் குணமாகாததால், கடவுளின் சக்தியால் தனது நோயைக் குணப்படுத்த கிறிஸ்தவ சபைக்குச் சென்றுள்ளார்.
சில நாட்கள் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து அச்சபை ஊடாக தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
எனினும, மரணத்திற்கான காரணம் தெரியவில்லை.
இந்நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் உடலை புதைக்குமாறு கூறி, இன்றைய தினம் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.
No comments:
Post a Comment