மன்னாரிற்கு வரப்போகும் ஸ்மார்ட் (SMART) எதிர்காலம்! மாவட்ட அரச அதிபரின் அவசர வேண்டுகோள்.
மன்னாரிற்கு ஸ்மார்ட் (SMART) எதிர்காலம் நடமாடும் சேவை மூலம் மன்னார் மாவட்ட மக்களுக்கு தொழில் வழங்கும் நடவடிக்கை பல்வேறு உதவித் திட்டங்கள் எதிர்வரும் 20 மற்றும் 21 ஆம் திகதி இடம் பெற உள்ள நிலையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இன்றைய தினம் மாலை 3.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் விசேட ஊடக சந்திப்பு இடம் பெற்றது.
இதன் போது குறித்த நடமாடும் சேவை தொடர்பிலும் மன்னார் மாவட்ட மக்கள் குறித்த நடமாடும் சேவையை பயன்படுத்தி தொழில் வாய்ப்பு உட்பட பல்வேறு உதவித் திட்டங்களை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை பயன்படுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த நடமாடும் சேவையில் 36 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் கலந்து கொள்வதுடன் பின்தங்கிய மாணவர்கள் மற்றும் உள்நாட்டு தொழில் முறைமையிலான வேலை வாய்ப்புகளும் குறித்த நடமாடும் சேவையுடாக வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
குறிப்பாக இஸ்ரவேல் தொழில்களை பதிவு செய்தால் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளை பெறுவதல்.குறித்த நடமாடும் சேவை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ளது.
ஜனாதிபதியின் வழிகாட்டலில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார வின் எண்ணக்கருவில்,இராஜாங்க அமைச்சர் ஜகத் புஸ்பகுமார அவர்களின் ஒத்துழைப்போடு,இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தமானின் பங்கு பெற்றுதலுடன் எதிர்வரும் 20 ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மன்னார் நகர பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற உள்ளது.
எனவே மக்கள் மற்றும் இளைஞர் யுவதிகளை குறித்த நடமாடும் சேவையில் கலந்து கொண்டு பயன் பெற்றுக் கொள்ளுமாறு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
%20%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D!%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%20%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D..jpg)
No comments:
Post a Comment