முள்ளியவளையில் மாவீரன் பண்டாரவன்னியன் வரலாற்று நாடகம்!
முல்லைத்தீவு முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலய அரங்கில் மாவீரன் பண்டாரவன்னியனின் வரலாற்று நாடகம் 20.04.2024 அன்று இரவு அரங்கேற்றப்பட்டுள்ளது.
முள்ளியவளை கலைத்தாய் நாடக கலமான்றத்தின் ஏற்பட்டில் முதுபெரும் கலைஞர் அண்ணாவியார் கலாபூசணம் என்.எஸ். மணியம் அவர்களின் நெறியாள்கையில் நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது.
வைத்தியலாநிதி கை.சுதர்சன் தலைமையில் நடைபெற்ற இந்த நாடக அரங்கேற்ற நிகழ்வில் ஆசியுரையினை முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலய பிரதமகுரு ரகுநாதக்குருக்கள் நிகழ்த்தியதை தொடர்ந்து முள்ளியவளையினை சேர்ந்த முதுபெரும் கலைஞர்கள்,மற்றும் மறைந்த கலைஞர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டுள்ளார்கள்.
சிறப்பாக முள்ளியளையினை சேர்ந்த விளையாட்டு மங்கை அகிலத்திருநாயகி அவர்களும் கௌரவிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து மாவீரன் பண்டாரவன்னியரின் வரலாற்று நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது

No comments:
Post a Comment