தியத்தலாவ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7ஆக அதிகரிப்பு
தியத்தலாவயில் நடைபெற்ற கார் பந்தய போட்டியின்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இந்த விபத்தில் 8 வயது சிறுமி, 4 பந்தய உதவியாளர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, 20 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் மூவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் கூறுகின்றனர்.
பந்தயத்தின்போது கார் ஒன்று பாதையை விட்டு விலகியதாலேயே இந்த விபத்துக்கு நேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
தியத்தலாவ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7ஆக அதிகரிப்பு
Reviewed by Author
on
April 21, 2024
Rating:

No comments:
Post a Comment