கடந்த 24 மணித்தியாலங்களில் 7 மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகம்
கடந்த 24 மணித்தியாலங்களுக்குள், 16 வயதுக்குட்பட்ட ஏழு பாடசாலை மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது .
இந்த பாடசாலை மாணவிகள் 12, 14, 10 மற்றும் 15 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.
அத்துடன் , மனம்பிட்டிய, மாங்குளம், இரத்தினபுரி, வெல்லம்பிட்டிய, வெலவாலி மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏனைய சந்தேக நபர்கள் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன் அவர்களைக் கைது செய்ய பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
Reviewed by Author
on
May 15, 2024
Rating:


No comments:
Post a Comment