மாகாண ரீதியில் நடைபெற்ற மல்யுத்த போட்டியில் முல்லைத்தீவு சார்பில் வெற்றியீட்டிய மாணவர்களை கௌரவிப்பு
மாகாண ரீதியில் நடைபெற்ற மல்யுத்த போட்டியில் முல்லைத்தீவு சார்பில் வெற்றியீட்டிய மாணவர்களை கௌரவிப்பு
மாகாண ரீதியில் நடைபெற்ற மல்யுத்த போட்டியில் முல்லைத்தீவு சார்பில் பங்குபற்றி பதக்கங்களை வென்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் தலைமையில் இன்று(15) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
மாகாண ரீதியில் நடைபெற்ற மல்யுத்த போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட அணிவீரர்கள் பெற்றுக்கொண்ட 20 பதக்கங்களில் 06 தங்கப்பதக்கங்களையும் 06 வெள்ளிப்பதக்களையும் 03 வெண்கலப்பதக்களையும் முல்லைத்தீவு மாவட்ட வீரர்கள் பெற்றிருந்தனர்
குறித்த வீரர்களை கௌரவிக்கும் இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் சிவபாலன் குணபாலன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பதக்கம் அணிவித்து வாழ்த்துக்களையும் தெரிவித்தார்
இந்நிகழ்வில் திட்டமிடல் பணிப்பாளர் சமுர்த்தி உத்தியோகத்தர் விளையாட்டு வீரர்கள் பயிற்றுவிற்பாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்
Reviewed by Author
on
May 15, 2024
Rating:






No comments:
Post a Comment