பச்சை மிளகாயினால் செய்த ஐஸ்கிரீம் இலங்கை உணவு துறையில் புதிய புரட்சி
பதுளை - வெலிமடை பகுதியில் பச்சைமிளகாயை கொண்டு ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
குறித்த உற்பத்திக்காக ஓரளவு பழுத்த பச்சைமிளகாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஊவா வெல்லஸ்ஸ தொழிநுட்ப பல்கலைகழகத்தின் உதவியுடன் இப் பச்சை மிளகாய் ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெலிமடை பகுதியைச் சேர்ந்த ருவான் ரங்காதிலக என்ற நபரே இவ்வாறு பச்சை மிளகாய் ஐஸ்கிரீமை உற்பத்தி செய்துள்ளார்.
விவசாய விவாகார மற்றும் ஆய்வுப்பயிற்சி நிலையத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே ருவான் ரங்காதிலக என்பவரால் இந்த பச்சை மிளகாய் ஐஸ்கிரீம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஹல்கியாயாம மற்றும் வருண ஆகிய பச்சை மிளகாய்களின் வகைகளைக் கொண்டு புதிய வகையிலான ஒரு புதிய கலப்பு மிளகாய் இனத்தை கண்டறிந்துள்ளார்.
இந்த புதிய கலப்பு வகை மிளகாயை அடிப்படையாகக் கொண்டே மேற்படி ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இதனுடன் மாட்டுப்பால்,சீனி, வெண்ணெய் போன்ற பொருட்கள் சேர்த்து இதனை உற்பத்தி செய்ததாகவும் நல்ல வாய்ப்பு கிடைத்தால் இதனை சந்தைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாகவும் ருவான் ரங்காதிலக அந்நிகழ்வில் மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment