அண்மைய செய்திகள்

recent
-

விடுதலைப்புலிகளின் அன்பு முகாம் அமைக்கப்பட்டிருந்த பகுதியில் கைது நடவடிக்கை: அதிரடிப்படையால் கைது செய்யப்பட்ட சந்கே நபர்கள்

 கிளிநொச்சி மாவட்டத்தின் இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அழகாபுரி பகுதியில் விடுதலைப்புலிகளால் அன்பு முகாம் அமைக்கப்பட்டிருந்த பகுதியில் ஸ்கானர் மூலம் புதையல் தேட முயற்சித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


விடுதலைப்புலிகளின் அன்பு முகாம் இருந்த பகுதியில் புதையல் தேடிய, பொலிஸ் தலைமையகத்தில் செல் IG பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர், மற்றும் தென்னிலங்கை பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் உட்பட ஐவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.


பொலிஸ் விசேட அதிரடிப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்றைய தினம் இரவு 10.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேக நபர்கள் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதன்போது 2 இலத்திரனியல் ஸ்கானர் இயந்திரங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.


சம்பவத்தில் கைதானவர்கள் கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.


குறித்த சந்தேக நபர்களை மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் இன்று நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.



விடுதலைப்புலிகளின் அன்பு முகாம் அமைக்கப்பட்டிருந்த பகுதியில் கைது நடவடிக்கை: அதிரடிப்படையால் கைது செய்யப்பட்ட சந்கே நபர்கள் Reviewed by Author on June 08, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.