தமிழ் ஈழம் வேண்டும்: மோடியிடம் மதுரை ஆதீனம் கோரிக்கை
பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழர்களுக்காக தமிழ் ஈழம் கேட்பேன் என மதுரை ஆதீனம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
இந்திய லோக் சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்றதன் பிரகாரம் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ளார்.
நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானமை குறித்து மதுரை ஆதீனம் வெளியிட்டுள்ள கருத்தில்,
”இலங்கையில் இலட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தவர்களும் வெற்றி பெற்று விட்டார்களே என்ற வருத்தம் எனக்கு உள்ளது.
அதன் காரணமாகத் தான் அவர்களுக்கு மத்தியில் ஆட்சி செய்ய முடியவில்லை.
அதேநேரம், மோடி இலங்கைத் தமிழர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தார். மோடிக்கு முக்கிய கோரிக்கையை முன்வைக்கிறேன்.
ஈழத்தில் இருக்கும் மக்களை பாதுகாக்க தமிழ் ஈழம் உருவாக வேண்டும்.
மோடி பிரதமரானதில் எனக்கு மிக மகிழ்ச்சி. சீமானின் வெற்றியால் விடுதலை புலிகளுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
சீமான் என்னிடம் தனி நாடு வேண்டும் எனக் கோரிக்கை வைக்க வேண்டும் என கூறினார். அதனைத் தான் நானும் கூறுகிறேன்.” எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment