மன்னார் முருங்கன் பகுதியில் கோர விபத்து-வயோதிப பெண் பலி
மன்னார் -மதவாச்சி பிரதான வீதி, முருங்கன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இசைமாலைத் தாழ்வு பகுதியில் ஹயஸ் ரக வாகனம் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியதில் அதில் பயணித்த 14 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவமானது இன்று (21)மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,,,
கல்முனையில் இருந்து மன்னார் மறிச்சுக்கட்டி பிரதேசத்திற்கு குறித்த வாகனத்தில் வருகை தந்தவர்களின் வாகனம் முருங்கன், இசைமாலை தாழ்வு, நரிக்காடு வளைவு பகுதியில் உள்ள மின் கம்பத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த அனைவரும் முருங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக 7 பேர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
இவர்களில் வயோதிப பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வாகனத்தில் பயணித்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சார்ந்த உறவினர்கள் என தெரிய வருகிறது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
Reviewed by Author
on
June 21, 2024
Rating:

.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)

No comments:
Post a Comment