ஈழத்து கலைஞர்களால் உருவாக்கப்பட்ட மூக்குத்தி பூ திரைப்படம் மன்னாரில் வெளியீடு
வடமாகாண கலைஞர்களை கொண்டு உருவாக்கப்பட்டு விமர்சன ரீதியாக வெற்றி பெற்றுள்ள மூக்குத்தி பூ திரைப்படம் இம் மாதம் 30 திகதி மன்னார் சன் சினிமா திரையரங்கில் வெளியாகவுள்ளது
யாழ்பாணம் மன்னார் வவுனியா இளைஞர் யுவதிகளின் நடிப்பில் இயக்குனர் ஈழவானியின் இயக்கத்தில் பத்மயன் சிவாவின் இசையமைப்பில் ரெஜி செல்வராசாவின் ஒளிப்பதிவில் அலெக்ஸ் கோபியின் படத்தொகுப்பில் உருவாகியுள்ள குறித்த திரைப்படத்தில் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த இரு இளைஞர்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்
நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஈழத்தில் இருந்து ஒரு பெண் தயாரிப்பாளரினால் முழு நேர திரைப்படம் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள நிலையில் பல மாவட்டங்களில் குறித்த திரைப்படம் அரங்கு நிறைந்த காட்சிகளுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது
இந்த நிலையில் எதிர்வரும் 30 திகதி மாலை 4 மணிக்கு மன்னார் சன் திரையரங்கில் பிரமாண்டமாக குறித்த திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் ஈழத்து சினிமா வளர்சியில் அக்கறை கொண்டவர்கள் வருகை தந்து ஆதரவை வழங்குமாறு பட குழு கோரிக்கை விடுத்துள்ளது
Reviewed by Author
on
June 27, 2024
Rating:
.jpg)

No comments:
Post a Comment