கெப் வண்டிக்குள் எரியூட்டப்பட்ட நிலையில் சடலம்
உப்புவெளி பகுதியில் ஒருவர் கொல்லப்பட்டு கெப் வண்டிக்குள் எரியூட்டப்பட்டுள்ளதா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உப்புவெளி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (14) மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தனிப்பட்ட தகராறு காரணமாக நேற்று அதிகாலை இக்கொலை இடம்பெற்றுள்ளதா தெரியவந்துள்ளது.
திருகோணமலை அலஸ்வத்த பகுதியைச் சேர்ந்த 41 வயதான என்பவரே உயிரிழந்துள்ளார்.
கொலையுடன் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் குச்சவெளி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட நபர் அலஸ்வத்தை, நிலாவெளி வீதியில் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
குறித்த நபர் மேலும் இருவருடன் கடையில் இருந்த போது சந்தேகநபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து அந்த நபரை தாக்கி தனது கெப் வண்டியுடன் கடத்திச் சென்றுள்ளனர்.
பின்னர், அவரைக் கொன்றுவிட்டு சடலத்தை மொரவெவ பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு கெப் வண்டிக்குள் வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Reviewed by Author
on
July 15, 2024
Rating:


No comments:
Post a Comment