கொழும்பில் 67 ஆவது மாடியில் இருந்து குதித்து 15 வயதுடைய மாணவர்கள் இருவர் தற்கொலை
கொழும்பு - கொம்பனி வீதியில் உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் 67வது மாடியில் இருந்து 15 வயதான இரு மாணவர்கள் கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.
இந்தச் சம்பவம் நேற்று மாலை பதிவாகியுள்ளது. 15 வயதான சிறுவனும், சிறுமியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் வெள்ளவத்தை மற்றும் களனி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் விசாரணைகளின்படி, இரு மாணவர்களும் சர்வதேச பாடசாலையில் ஒரே வகுப்பில் பயின்று வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், பாடசாலை நேரம் முடிந்ததும் குறித்த கட்டிடத்தில் நடைபெற்ற விருந்தில் கலந்து கொண்டதாகவும், இந்த விருந்தில் சுமார் 100 மாணவர்கள் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
விசாரணையில் இரு மாணவர்களும் 67வது மாடியில் இருந்து குதித்ததும், மூன்றாவது மாடியில் மேல் தளத்தில் இருந்து அவர்களின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும் மாணவர்களின் காலணிகள் 67 மாடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கொம்பன்ன வீதி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Reviewed by Author
on
July 03, 2024
Rating:


No comments:
Post a Comment