அண்மைய செய்திகள்

recent
-

சற்றுமுன் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் வாகனம் விபத்து

 நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் பயனித்த வாகனம் ஏ9 வீதி - கிளிநொச்சியில் விபத்துக் குள்ளாகியுள்ளது.


குறித்த விபத்து இன்று (27) பிற்பகல் 3.30 மணியளவில் கிளிநொச்சி ஏ9 வீதி 155 கட்டைப் பகுதியில் ஏற்பட்டுள்ளது.


யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் சொகுசு வாகனம் மீது எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.



சாரதியின் கவனயீனம்

இதன்போது சுமந்திரனின் வாகனத்திற்கும், மோட்டார் சைக்கிளுக்கும் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில் விபத்து தொடர்பில் எமது ஊடகப்பிரிவு சுமந்திரனை தொடர்பு கொண்டபோது,



''யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனது வாகனத்தின் மீது எதிரே வருகைதந்த மோட்டார் சைக்கிள் மோதுண்டது.



மோட்டார் சைக்கிளில் சாரதியின் கவனயீனமே விபத்திற்கு காரணம்.


விபத்தில் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. தனது வாகனத்திற்கே சேதம் ஏற்பட்டுள்ளது." என விளக்கமளித்தார்.




சற்றுமுன் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் வாகனம் விபத்து Reviewed by Author on July 27, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.