மேலதிக வகுப்பிற்கு சென்ற 4 மாணவர்களை காணவில்லை
மேலதிக வகுப்பிற்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறிய 3 பாடசாலை மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் காணாமல் போயுள்ளனர்.
இவர்கள் 16 வயதுக்கும் 14 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும், தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டம் ஒன்றில் வசிப்பவர்கள் எனவும் கடந்த 14 ஆம் திகதி முதல் இவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலை முடிந்த வீடு திரும்பிய இம் மாணவர்கள் மேலதிக வகுப்பிற்கு செல்வதாக கூறி, மீண்டும் வீட்டை விட்டு வெளியேறினர்.
இவ்வாறு சென்ற பிள்ளைகள் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் தலவாக்கலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
காணாமல் போன 4 மாணவர்களும் உறவினர்கள் ஆவர்.
11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 16 வயதுடைய 3 சிறுமிகளும், 9 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 14 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரும் காணாமல் போயுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Reviewed by Author
on
July 18, 2024
Rating:


No comments:
Post a Comment