கிளிநொச்சியில் டிப்பர் வாகனத்தின் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்
>கிளிநொச்சி பூநகரி பரந்தன் வீதியில் பொலிசாரின் சைகையை மீறி சென்ற டிப்பர் வாகனத்தின் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதில் ஒருவர் காயமடைந்து கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.
செவ்வாய்க்கிழமை (16) பிற்பகல் கிளிநொச்சி பூநகரி பிரதேசத்துக்குட்பட்ட குடமுருட்டி பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்ந்து சென்ற டிப்பர் வாகனத்தை பொலிசார் சோதனையிட முற்பட்ட சமயம் பொலிசாரின் சைகையை மீறி டிப்பர் வாகனம் வேகமாக பயணித்துள்ளது
குறித்த வாகனத்தை சுமார்13 கிலோமீற்றர் தூரம் துரத்திச் சென்ற போலீசார் குறித்த டிப்பர் வாகனத்தின் மீது பூநகரி பகுதியில் வைத்து மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் டிப்பர் வாகனத்தில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளார்
இவ்வாறு துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
இதே நேரம் டிப்பர் வாகனத்தில் பயணித்து ஏனைய இருவர் தப்பி ஓடிய நிலையில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
சம்பவத்தின் போது கிளிநொச்சியை சேர்ந்த ஆறுமுகம் நிதர்சன் (வயது- 23) என்பவரே இவ்வாறு காயமடைந்து கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Reviewed by Author
on
July 16, 2024
Rating:


No comments:
Post a Comment