அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் ஊடகவியலாளர் எஸ்.ஜெகன் எழுதி வெளியீடு செய்த 'மகாவம்ச விஜயனும் மன்னார் கட்டுக்கரை பிரதேசமும்' இடப்பெயர் ஆய்வு நூல் ஒரு தொகுதி டெவ்லிங் நிறுவனத்தினரிடம் கையளிப்பு

 மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள   சிரேஷ்ட பிரஜைகளின் நலன் சார்ந்து செயற்பட்டு வரும்  'மெதோடிஸ்  சர்ச் டெவ்லிங்' நிறுவனம் மன்னார் ஊடகவியலாளர் எஸ்.ஜெகன் எழுதி வெளியீடு செய்த  மகாவம்ச விஜயனும் மன்னார் கட்டுக்கரை பிரதேசமும் என்னும் வரலாற்று ஆய்வு நூலில் ஒரு தொகுதி நுலினை  பெற்றுக் கொண்டுள்ளனர்.


மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள   சிரேஷ்ட பிரஜைகளின் வாசிப்பு திறனை மேம்படுத்தும் வகையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கு வழங்கும் வகையில் குறித்த நூல் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.


மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் க.டெ.அரவிந்தராஜ்   முன்னிலையில் இன்றைய தினம் (22) காலை 10.30 மணியளவில் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் வைத்து டெவ்லிங் நிறுவனத்தின் மன்னார் மாவட்ட  பணிப்பாளர்  எஸ்.என்.நிமால்  பெற்றுக் கொண்டார்.


மேலும் இந்த நிகழ்வில் குறித்த வரலாற்று ஆய்வு  நூலை வெளியீடு செய்த மன்னார் ரோட்டரி கழகத்தின் தலைவர் திருமலை ராசா தனேஸ்,  மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் சிரேஷ்ட பிரஜைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஜோன்சன் சந்திரிகா, மன்னார் ரோட்டரி கழக  உறுப்பினரும் கிராம சேவையாளருமான  .சிறிஸ்கந்தராஜா, மற்றும் டெவ்லிங் நிறுவனத்தின் உறுப்பினர்களும், கலந்து கொண்டனர்.


குறிப்பாக மன்னார் மாவட்டத்தின் வரலாறுகளை அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்வதற்காக வரலாற்று ஆய்வு நூல்கள், கலை கலாச்சார பண்பாடுகள், ஆயுர்வேத வைத்திய முறைகள், போன்ற தமிழர்களின் பாரம்பரியங்கள் அழிந்து விடாமல் அவற்றை ஒவ்வொரு தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் ஆவணப்படுத்தும் நோக்கில்  டெவ்லிங் நிறுவனமானது  இவ்வாறான நூல்களை கொள்வனவு செய்து  டெவ்லிங் நிறுவனத்தின் கீழ் இயங்கும் சிரேஷ்ட பிரஜைகள் சங்கங்களுக்கு வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.













.

மன்னார் ஊடகவியலாளர் எஸ்.ஜெகன் எழுதி வெளியீடு செய்த 'மகாவம்ச விஜயனும் மன்னார் கட்டுக்கரை பிரதேசமும்' இடப்பெயர் ஆய்வு நூல் ஒரு தொகுதி டெவ்லிங் நிறுவனத்தினரிடம் கையளிப்பு Reviewed by Author on July 22, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.