அண்மைய செய்திகள்

recent
-

பல்துறை ஆற்றல் கொண்ட மன்னார் அமுதன் மொழிபெயர்ப்பாளராக நியமனம்.

.மன்னார் சின்னக்கடை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட .ஜோசப் அமுதன் டானியல் சத்தியப்பிரமாண  மொழிபெயர்ப்பாளராக (தமிழ்-ஆங்கிலம்) செவ்வாய்க்கிழமை (16) மன்னார் மாவட்ட நீதிமன்ற நீதவான் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். 



மன்னார் மாவட்ட செயலகத்தில் கரையோரம் பேணல் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தராக பணியாற்றி வரும் ஜோசப் அமுதன் டானியல் தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மும்மொழிகளிலும் புலமை உள்ளவர் என்பதுடன் ஆங்கில உயர் தேசிய டிப்ளமோ, கணனி அறிவியலில் இளமானி (BSc.), பட்டப்பின் பட்டயக் கல்வி (PGDCA), சமூகவியலில் முதுமாணி(MA), உட்பட 12 பட்டயக் கல்வி நெறிகளை பூர்த்தி செய்துள்ளார். 


சமூக அக்கறையுடன் செயல்பட்டு வரும் இவர் ஒரு அகில இலங்கை சமாதான நீதவானும் இலங்கை திறந்த பல்கலைக்கழக சட்டபீட இரண்டாமாண்டு மாணவருமாவார். 


வடமாகாண இளங்கலைஞர் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ள அமுதன் விட்டு விடுதலை காண், அக்குரோணி, அன்னயாவினும், ஒற்றை யானை ஆகிய நான்கு நூல்களையும் ABOVE ALL குறும்படம், Mannar - Our Land Our Right என்ற ஆவண படத்தையும் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது



பல்துறை ஆற்றல் கொண்ட மன்னார் அமுதன் மொழிபெயர்ப்பாளராக நியமனம். Reviewed by Author on July 16, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.