ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய சப்பறத் திருவிழா சிறப்புற இடம்பெற்றது.
ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய சப்பறத் திருவிழா சிறப்புற இடம்பெற்றது.
இலங்கையிலுள்ள இரு தான்தோன்றீச்சரங்களில் ஒன்றான, வரலாற்றுச் சிறப்புமிக்க முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான், தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவத்தின், பதின்நான்காம்நாள் உற்சவமான சப்பறத்திருவிழா 19.07.2024 வெள்ளிக்கிழமை நேற்று மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
அந்தவகையில் வசந்தமண்டபத்தில் எழுந்தருளியிருந்த இறைவன் வேகாவனேஸ்வரர், இறைவி பூலோகநாயகி அம்மையார், வள்ளி, தெய்வானை சமேதராக எழுந்தருளியிருந்த முருகப்பெருமான், பிள்ளையார் ஆகியோருக்கு விசேட பூசைவழிபாடுகள் இடம்பெற்றன.
அதனைத்தொடர்ந்து இறைவன் வேகாவனேஸ்வரர், இறைவி பூலோகநாயகி, வள்ளி, தெய்வானை சமேதராக முருகப்பெருமான், பிள்ளையார்ஆகியோர் பெருந்திரளான பக்தர்கள் புடைசூழ ஆலயத்தின் உள்வீதி வலம்வந்தனர்.
அதனையடுத்து அலங்கரிக்கப்பட்ட சப்பறத்தில் நடுவே இடபவாகனத்தில் இறைவன் வேகாவனேஸ்வரர் மற்றும், இறைவி பூலோகநாயகி ஆகியோர் எழுந்தருளியதுடன், வலதுபுறமாக பிள்ளையார் இடபவாகனத்தில் எழுந்தருளியதுடன், இடதுபுறமாக இடபவாகனத்தில் வள்ளி, தெய்வானை சமேதராக முருகப்பெருமானும் எழுந்தரளினார்.
தொடர்ந்து பெருந்திரளான பக்தர்கள் அரோகராக் கோசத்துடன் சப்பறத்தினுடைய வடக் கயிற்றினைப் பிடித்து இழுக்க எம்பெருமான் வேகாவனேஸ்வரர் இறைவி பூலோகநாயகி, பிள்ளையார் மற்றும், வள்ளி, தெய்வானை சமேதராக முருகப்பெருமான் ஆகியோர் சப்பறத்தில் வெளிவீதி பவனிவந்து பக்தர்களுக்கு அருளாசி நல்கினர்.
மேலும் இந்த சப்பறத் திருவிழாவில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, காவடி, தூக்குக்காவடி, பால்ச்செம்பு, தீச்சட்டி உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை நிறைவேற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Reviewed by Author
on
July 20, 2024
Rating:







No comments:
Post a Comment