அண்மைய செய்திகள்

recent
-

பள்ளிச் சிறார்கள் படுகொலை செய்யப்பட்ட செஞ்சோலை வளாகத்தில் மாணவர்களுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி

 செஞ்சோலை வளாகத்தில்  

ஸ்ரீலங்கா இராணுவத்தின்  விமானப்படையினரின் மிலேச்சத்தனமான வான் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட  மாணவர்களுக்கான அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஒன்று இன்றையதினம்(14) செஞ்சோலை வளாகத்தில்  உணர்வுபூர்வமாக இடம்பெற்றது .


முல்லைத்தீவு – வள்ளிபுனம், இடைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006 ம் ஆண்டு தலைமைத்துவ  பயிற்சிக்காக சென்றிருந்த மாணவர்கள் மீது இலங்கை விமானப்படை நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் உயிரிழந்த பாடசாலை மாணவர்கள் 53 பேர் உட்ப்பட 61 பேர் உயிரிழந்தனர்


 இவர்களது  18ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வான் தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் இன்றையதினம் (14) காலை உணர்வுபூர்வமாக  அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.


கடந்த 2006.08.14 ஆம் திகதியன்று வள்ளிபுனம் – இடைக்கட்டு பகுதியில் உள்ள செஞ்சோலை வளாகத்தில் விமானத்தாக்குதல் இடம்பெற்ற நேரத்தில் குறித்த செஞ்சோலை வளாகத்தில் இன்று (14.08.2024) இந் நிகழ்வு உணர்வு பூர்வமாக நடைபெற்றுள்ளது.


உயிரிழந்த உறவுகளுக்கு சுடரேற்றி, அக வணக்கம் செலுத்தி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

குறித்த அஞ்சலி  நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், முன்னாள் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர் சி.குகநேசன் மற்றும் சமூக செயற்ப்பாட்டாளர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், சமூக என பலரும்  கலந்து கொண்டு உணர்வுபூர்வமாக அஞ்சலியினை செலுத்தியிருந்தன




பள்ளிச் சிறார்கள் படுகொலை செய்யப்பட்ட செஞ்சோலை வளாகத்தில் மாணவர்களுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி Reviewed by Author on August 14, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.