மன்னாரில் எலக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனை நிலையம் மற்றும் காட்சி அறை திறந்து வைப்பு.
பொருளாதார நெருக்கடியில் மக்களின் போக்குவரத்தை இலகுவாக்கும் எலக்ட்ரிக் இருசக்கர (மோட்டார் சைக்கிள் )வாகன விற்பனை நிலையம் மற்றும் காட்சி அறை மன்னார் நகரில் முதல் முறையாக இன்று (22) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் மீன்பிடி மற்றும் விவசாயத்தை நம்பி வாழும் மக்களின் போக்குவரத்தை இலகுவாக்கும் வகையில் எலக்ட்ரானிக் இரண்டு சக்கர வாகனம் விற்பனை காட்சியரை இன்று வைபவ ரீதியாக காலை 10 மணி அளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் நகரில் 20 வருடங்களுக்கு மேலாக இரண்டு சக்கர மோட்டார் வாகன விற்பனை சேவையை வழங்கும் மேசியா நிறுவனம். மக்களின் போக்குவரத்துக்காக வாகன விற்பனையில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போதைய காலத்திற்கு ஏற்றவாறு மக்களின் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு எலக்ட்ரானிக் இரண்டு சக்கர வாகனத்தை இன்று மன்னார் பகுதியில் அறிமுகப்படுத்தியுள்ளது.
சர்வதேச தரத்தை கொண்ட YADEA. யாடியா உற்பத்தி நிறுவனத்தின் இரண்டு சக்கர வாகன விற்பனை நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் நகர் சின்ன கடை பிரதான வீதி பகுதியில் புதிய விற்பனை நிலையம் மற்றும் காட்சி அறை கொழும்பிலிருந்து வருகை தந்த யாடியா இரண்டு சக்கர வாகனத்தின் இலங்கைக்கான விற்பனை முகாமையாளர் மற்றும் வடக்கு பிராந்திய முகாமையாளர். உட்பட மெசியா நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் பணிப்பாளர். மற்றும் வர்த்தக பிரமுகர்கள் பலர் குறித்த திறப்பு விழாவில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Reviewed by Author
on
August 22, 2024
Rating:


No comments:
Post a Comment