அண்மைய செய்திகள்

recent
-

போலியான இலங்கை கடவுச்சீட்டை பயன்படுத்தி மோசடி: கனடாவில் தமிழர் ஒருவர் கைது

 போலியான இலங்கை கடவுச்சீட்டை பயன்படுத்தி வங்கிக் கணக்கைத் திறக்க முற்பட்ட தமிழர் ஒருவர் அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 13ஆம் திகதி பிக்கெரிங்க் நகரில் வைத்து, Whitchurch-Stouffville நகரைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரான 31 வயதான கபிலரசு கருணாநிதி பிக்கெரிங்க் நகரில் உள்ள Scotia வங்கியில் வங்கிக் கணக்கைத் திறக்க முற்பட்டுள்ளார் என டர்ஹாம் பிராந்திய பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், சந்தேகநபர் வழங்கிய கடவுச்சீட்டு போலியானது என்பதை அறிந்த வங்கி ஊழியர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டதுடன், அவருக்கு எதிராக 11 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சொந்த பிணையில் விடுதலையான அவருக்கு எதிரான குற்றச் சாட்டுகள் நீதிமன்றில் நிரூபிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.




போலியான இலங்கை கடவுச்சீட்டை பயன்படுத்தி மோசடி: கனடாவில் தமிழர் ஒருவர் கைது Reviewed by Author on August 19, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.