வெளிநாடுகளில் சூடு பிடித்திருக்கும் jvp யின் தேர்தல் பிரச்சாரம்
ஜனாதிபதித் தேர்தலில் ஜேவிபியின் அரசியல் கூட்டணியான தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்கவை வெற்றி பெறச் செய்வதற்காக வெளிநாடுகளில் வசிக்கும் செயற்பாட்டாளர்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.
அதன்படி, வெளிநாட்டில் இருக்கும் இலங்கையர்களுக்கு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல், அறிவுறுத்தல்களை வழங்குதல் குறித்த செயற்பாட்டாளர்கள் மூலம் இந்நாட்டில் உள்ள உறவினர், நண்பர்களை அறியப்படுத்துதல் போன்ற வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த செயற்பாட்டாளர்களில் அதிகளவானோர் வாக்களிப்பதற்காக இலங்கைக்கு வருகைத் தர அனைத்து நடவடிக்கைகளும் தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Reviewed by Author
on
August 18, 2024
Rating:


No comments:
Post a Comment