“கஞ்சிபானை இம்ரான் வெளிநாட்டில் கைது“: பரவும் செய்திகள் போலியானவை
போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய குற்றவாளியான கஞ்சிபானை இம்ரான் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகள் போலியானவை எனவும் கஞ்சிபானை இம்ரான் வெளிநாட்டில் கைது செய்யப்பட்டதாக இதுவரையில் தெரியவரவில்லை எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.
அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரவித்தார்.
கஞ்சிபானை இம்ரான் தற்போது மறைந்திருக்கும் இடத்தை தான் அறிவதாகவும் அதனை ஊடகங்களுக்கு அறியப்படுத்த மாட்டார் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“சமூக வலைத்தளங்களில் தெரிவிப்பது போன்று கஞ்சிபானை இருக்கும் இடம் சரியானது அல்ல. சிலர் அந்த பொறுப்புக்களை தம்மிடம் வழங்குமாறும், குற்றவாளிகளை வரவழைப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
அந்த எந்தக் காரணங்களும் உண்மை கிடையாது. இந்நாட்டு புலனாய்வு பிரிவினர் வழங்கும் தகவல்கள் மாத்திரமே உண்மையானவை.
கஞ்சிப்பானை இம்ரான் இருக்கும் இடம் எங்களுக்கு தெரியும். அவரை வெளிநாட்டில் கைது செய்துள்ளதாக இதுவரையில் எங்களுக்கு தகவல்கள் வழங்கப்படவில்லை.” என தெரிவித்தார்.

No comments:
Post a Comment