தமிழ் பொது வேட்பாளரின் சின்னம் சங்கு: வேட்புமனுவும் சமர்பிப்பு
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15ஆம் திகதி) இடம்பெற்றது.
வடக்குக் கிழக்கு சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தமிழ்த்தேசியக் கட்சிகள் இணைந்து பொது வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்திருந்தன. தமிழரசுக் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் பொதுவேட்பாளர் தெரிவில் பங்கு கொள்ளவில்லை.
ஆனாலும் தமிழ் பொது வேட்பாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட கிளையின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேந்திரன் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் இன்று கொழும்பு ராஜகரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தின் தனது வேட்புமனுவை சமர்ப்பித்தார்.
தற்போது தமிழ் பொது வேட்பாளரான பா.அரியநேந்திரன் போட்டியிடும் சின்னம் சங்கு என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சங்கு சின்னத்தில் அவர் போட்டியிடவுள்ளார்.
Reviewed by Author
on
August 15, 2024
Rating:


No comments:
Post a Comment