யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் தொடரும் விபத்துக்கள்: மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதல்
யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் அண்மைக் காலமாக விபத்துக்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், தற்போது சாவகச்சேரி நுணாவில் பகுதியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இன்று காலை 7.45 க்கு சாவகச்சேரியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பேருந்து, ஹயஸ் ரக வானம், டிப்பர் என்பன முறையே தொடர்ச்சியாக பயணித்துள்ளன.
அந்தவேளை ஹயஸ் ரக வாகன சாரதி, பேருந்தை முந்திச் செல்ல முற்பட்டார். எதிரே வந்த வாகனத்தைக் கண்டு சடுதியாக ஹயஸ் வானை சாரதி திருப்ப முற்பட்ட போது, பேருந்தின் பின்பகுதியுடன் ஹயஸ் வாகனம் மோதியது.
இதனால் ஹயஸ் வாகனத்துக்கு பின்னால் வந்து கொண்டிருந்த டிப்பரும் அந்த ஹயஸ் வாகனத்தின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து காரணமாக ஹயஸ் வாகனம் பலத்த சேதமடைந்ததுடன், பேருந்தின் பின்பகுதி, டிப்பரின் முன்பகுதி என்பன பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
விபத்தின் போது ஹயஸ் வாகத்தின் சாரதிக்கு மாத்திரம் சிறிய காயம் ஏற்பட்டது. வேறு உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.
இச் சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Reviewed by Author
on
August 03, 2024
Rating:


No comments:
Post a Comment