மகப்பேற்று விடுதிக்குள் சென்று பெண் வைத்தியருடன் முரண்பட்ட வைத்தியர் அர்சுனா -பொலிஸில் முறைப்பாடு 7 திகதி வரை விளக்க மறியல்
மன்னார் பொது வைத்தியசாலைக்குள் நேற்று வெள்ளிக்கிழமை இரவு அனுமதி இன்றி நுழைந்து பெண்கள் மகபேற்று விடுதிக்குள் பணியாற்றிய வைத்தியருக்கு இடையூறு விளைவித்ததுடன் வைத்தியரின் அறைக்கு சென்று அனுமதி இன்றி புகைபடங்கள்,வீடியோ எடுத்தமை தொடர்பில் மன்னார் பொலிஸில் வைத்தியர் அர்சுனாவிற்கு எதிராக முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்
இன்றைய தினம் மதியம் மன்னார் பொது வைத்தியசாலையில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்துதெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில்
நேற்றைய தினம் ராமனாதன் அர்சுனன் என்பவர் இருவரை அழைத்து கொண்டு உரிய அனுமதி இன்றி வைத்தியசாலைக்குள் நுழைந்ததாககவும் அங்கு பணியாற்றிய வைத்தியர்களுடனும் ஊழியர்களுடனும் தர்கத்தில் ஈடுபட்டதாகவும் அதனை தொடர்ந்து வைத்தியசாலை பொலிஸாருக்கும் காவளாலர்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்துபவர்களை உள் அனுமதிக்க வேண்டாம் என தான் தெரிவித்ததாகவும் தெரிவித்தார்
ஆனாலும் அவர் மகப்பேற்று விடுதிக்குள் அனுமதி இன்றி நுழைந்து அங்கிருந்த பெண் நோயாளர்கள் மற்றும் பெண் வைத்தியர்களுடன் தர்கம் புரிந்தததுடன் அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்
மேலும் மகப்பேற்று விடுதியினுல் பிரச்சினை ஏற்படுத்தும் முகமாக வைத்தியரின் அறைக்குள் சென்று புகைப்படம் எடுத்தாகவும்,வீடியோ எடுத்ததாகவும் இதை அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தார்
மேலும் மன்னார் பொது வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் வைத்தியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு குறித்த வைத்தியருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு மேற்கொண்டுள்ளதாகவும் தற்போது குறித்த விசாரணை மன்னார் நீதி மன்றத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்
குறித்த ஊடக சந்திப்பில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சமன் பத்திரன மற்றும் மன்னார் மாவட்ட பிரதி பிராந்திய சுகாதர சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஒஸ்மன் டெணி ஆகியோறு கலந்து கொண்டிருந்தனர்
பொலிஸில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து வைத்தியர் அர்சுனா இன்றையதினம் சனிக்கிழமை மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 7 திகதிவரை விளக்கமறியளில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment