அநுரவின் வாக்கு வீதம் 30 வீதத்தால் அதிகரிப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச அதிக வாக்குகளைப் பெறுவார் என லங்காபிஸ் (Lanka Bizz) இணையத்தளம் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஜனாதிபதி தேர்தலில் 34 சதவீத வாக்குகளை அவர் பெறுவார் எனவும் கூறப்படுகிறது.
அத்துடன் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க 33 சதவீத வாக்குகளைப் பெறுவார் என்றும் அந்தத் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ 18 சதவீத வாக்குகளைப் பெறுவார் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 10 சதவீத வாக்குகளைப் பெறுவார் என்றும் குறித்த இணையத்தளம் குறிப்பிடுகிறது.
இது தொடர்பான கணக்கெடுப்புக்கு Ai தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளனர். இந்த பகுப்பாய்வு நேற்று நடத்தப்பட்டது மற்றும் மனித உள்ளீடு அல்லது சரிபார்ப்பைப் பயன்படுத்தவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்த நோக்கத்திற்காக, தற்போதைய அரசியல் இயக்கவியல், பொது உணர்வு மற்றும் வரலாற்று வாக்களிப்பு முறைகளின் அடிப்படையில், தேர்தல் முடிவுகள் குறித்த அனுமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இறுதி முடிவை நிர்ணயிப்பதில் வாக்காளர்களின் எண்ணிக்கையும் தேர்தலுக்கு முந்தைய மக்களின் உணர்வும் முக்கியமானதாக இருக்கும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தேர்தல் நாள் நெருங்கும் போது இயக்கவியல் மாறலாம், பிரச்சார உத்திகள், பொது விவாதங்கள் மற்றும் வெளிவரும் பிரச்சினைகள் ஆகியவற்றின் தாக்கம் இறுதி முடிவை தீர்மானிக்கும்.
கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்க போட்டியிட்டு மூன்று சதவீத வாக்குகளைப் பெற்றார். அந்தத் தேர்தலில் சஜீத் பிரேமதாச 41.99சதவீத சதவீத வாக்குகளைப் பெற முடிந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Reviewed by Author
on
August 11, 2024
Rating:


No comments:
Post a Comment