ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு சஜித்துக்கு: மூன்று நாள் அவகாசம் கோருகிறார் ஹக்கீம்
ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று (04) கொழும்பிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற அரசியல் உயர்பீடக் கூட்டத்தில் இத்தீர்மானதை எடுத்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் மூன்று விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, சஜித் பிரேமதாஸவுடன் எதிர்வரும் 72 மணித்தியாலங்களுக்குள் பேசுவார்த்தையை நடாத்தி தமது தீர்மானத்தை அறிவிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு சஜித்துக்கு: மூன்று நாள் அவகாசம் கோருகிறார் ஹக்கீம்
Reviewed by Author
on
August 04, 2024
Rating:

No comments:
Post a Comment