சிந்துஜாவின் மரண விசாரணைகள் திசை திருப்பப்படுகின்றது பொது அமைப்புக்களின் ஒன்றியம் குற்றச்சாட்டு
கடந்த வாரம் மன்னார் பொது வைத்தியசாலையில் வைத்தியர்கள்,தாதிய உத்தியோகஸ்தர்களின் கவனயீனத்தினால் மரணம் அடைந்த தம்பனைக்குளத்தை சேர்ந்த இளம் தாயின் மரணம் தொடர்பிலான விசாரணைகள் திசைதிருப்பப்படுவதாகவும் குற்றமிழைத்தவர்களை காப்பாற்றுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் V.S. சிவகரன் தெரிவித்துள்ளார்
இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்
அவர் மேலும் தெரிவிக்கையில்
சிந்துஜாவின் மரணம் நிகழ்ந்து ஏறக்குறைய 11 நாட்கள் நிறைவுற்றுள்ளது இன்னும் பூர்வாங்கமான அறிக்கை வெளிவரவில்லை ஆனாலும் இவர்கள் விசாரணைகளை வேறு கோணத்தில் திசைதிருப்புவதாக நம்பதகுந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக சிவகரன் தெரிவித்துள்ளார்
மன்னார் வைத்தியசாலையின் விசாரணை அறிக்கையும்,பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் அறிக்கையும், கள அறிக்கையும் ஒரு விடயத்தை செல்ல மாகாண சுகாதார அமைச்சின் விசாரணை இன்னொரு விதமாக காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்
குறிப்பாக மாகாண சுகாதார அமைச்சின் அறிக்கையில் இந்த கொலையில் சம்மந்தப்பட்டவர்களை அல்லது சம்மந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்க கூடியவர்களை அதிகாரமிக்கவர்களை காப்பாற்றுவதாகவே அமைந்துள்ளதாக நம்பதகுந்தவர்கள் தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்
இரண்டு குடும்பநல உத்தியோகஸ்தர்கள் இரண்டு தாதிய உத்தியோகஸ்தர்கள் உட்பட ஒரு வைத்தியரையும் தண்டிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே விசாரணைகள் ஒரு குறுகிய அளவிலே முன்னெடுக்கப்படுவதாகவும் சிவகரன் குற்றம் சுமத்தியுள்ளார்
தற்போது சம்மந்தப்பட்டவர்களை இடை நீக்கம் செய்யாது வெறுமனே இடமாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகளே வைத்தியசாலை தரப்பாலும் மாகாண சுகாதார அமைச்சாலும் இடம் பெறுவதாவும் சம்மந்தப்பட்ட 5 நபர்களுக்கும் இன்றைய தினம் இடம் மாற்றம் வழங்கப்படவுள்ளதாகவும் அறிய கூடியதாக உள்ளதாக இன்றைய ஊடக சந்திப்பின் போது சுட்டிகாட்டிதுள்ளது
நீதியான விசாரணை செய்வதாக மக்களுக்கு கூறிவிட்டு சாதாரண இடமாற்றத்தையே செய்வதாகவும் நீதியான விசாரணை இடம் பெறவில்லை எனவும் எனவே நீதியான விசாரணை இடம் பெறவேண்டும் என்பதுடன் குற்றம் இழைய்தவர்கள் வைத்திய துறையில் இருந்தே நீக்கப்படவேண்டும் என பொது அமைப்புக்களின் ஒன்றியம் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது
அதை விடுத்து சாதாரண இடமாற்றம் என்பதை பொது அமைப்புக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளபோவதில்லை என்பதுடன் இவ்வாறு செய்வதனால் இவர்களுக்கு எதிராக மிகப்பெரிய அளவிலே போராட்டம் ஒன்றை மேற்கொள்ள எங்களை வைத்திய தரப்பினர் நிர்பந்திக்கிரார்கள் என்பதையும் தெரிவித்துகொள்வதாகவும் தெரிவித்தனர்
தொடர்சியாக நாங்கள் வைத்தியசாலை மற்றும் சுகாதார துறையினரிடம் பேசி வருகின்றோம் இந்த மரணம் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி தொடர்பிலும் பேசியிருக்கின்றோம் நீதியை வழங்குவதில் இருந்து நீங்கள் பின்வாங்கினால் வைத்தியசாலைக்கும் மாகாண சுகாதார அமைச்சுக்கும் எதிராக எங்கள் செயற்பாடுகள் இருக்கும் என்பதை தெளிவாக உரியவர்களிடம் தெரிவித்துள்ளோம் எனவே இந்த விடயத்தில் நாங்கள் தொடர்ந்து விழிப்போடும் நீதிக்காகவும் காத்திருப்பதாக பொது அமைப்புக்களின் தலைவர் சிவகரன் சுட்டிகாட்டியுள்ளார்

No comments:
Post a Comment