மன்னார் விபத்தில் படுகாயமடைந்த வயோதிபர் சிகிச்சை பலனின்றி மரணம்.
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, ஜே.ஆர்.எஸ். அலுவலகத்திற்கு முன்பாக நேற்று முன்தினம் புதன்கிழமை(6) மாலை இடம்பெற்ற விபத்தில் படுகாயம் அடைந்த வயோதிபர் ஒருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை(8) மாலை யாழ் வைத்தியசாலையில் உயிரிழந்தார்.
கடந்த புதன்கிழமை (6) மாலை பாடசாலை முடிவடைந்து தனது பேரனை துவிச்சக்கர வண்டியில் ஏற்றிக் கொண்டு வீடு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த 67 வயதுடைய வயோதிபர் மீது அவர் வீதியூடாக அதி வேகமாக பயணித்த கூலர் வாகனம் மோதி விபத்தை ஏற்படுத்தியது.
இதன் போது காயமடைந்த பேரனான மாணவனும்,வயோதிபரும் உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு,மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
இதன் போது நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை 67 வயதுடைய வயோதிபர் சிகிச்சை பலனின்றி யாழ் வைத்தியசாலையில் உயிரிழந்தார்.
கூலர் வாகனத்தின் சாரதி யை கைது செய்த மன்னார் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment