அரச ஊழியர்கள் இனி சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிப்பதை கட்டுப்படுத்தும் புதிய சுற்றறிக்கைகள் வெளியீடு
🛑#அரச ஊழியர்கள் சமூக ஊடகங்களில் கருத்து தெரிப்பதைக் #கட்டுப்படுத்தும் #புதிய 2022/4 மற்றும் 2015/4 இலக்க சுற்றறிக்கைகள்!
அரச ஊழியர்கள் #Facebook, #WhatsApp,#Intergram,#TV,#Radio போன்ற சமூக ஊடகங்களில் கருத்துக்கள் தெரிவிப்பதைக் கட்டுப்படுத்தும் 2015/4 இல.பொது நிர்வாக சுற்றறிக்கைக்கு மேலதிகமாக 2022/4 ஆம் இலக்க புதிய பொது நிர்வாக சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இரு சுற்றறிக்கைகளின் அடிப்படையில் அரசியல் உரிமை இல்லாத இலங்கை அதிபர் சேவையில் தரம் 1 மற்றும் நிறைவேற்றுத் தரத்தை சேர்ந்த உத்தியோகத்தர்கள் (அரச சேவைமட்டம்-3 & 4 ஐச் சேர்ந்த ஊழியர்கள்) அமைச்சின் செயலாளரின் எழுத்து மூல அனுமதி இல்லாமல் சமூக ஊடகங்களில் துறை சார்ந்த கருத்துருக்களை வெளியிட முடியாது.
அதேபோல் ஏனைய அரச ஊழியர்களுக்கும் துறை சார்ந்த கருத்துருக்களை அனுமதி இல்லாமல் பதிவேற்றம் செய்ய முடியாது. கண்ணை மூடிக் கொண்டு சகட்டுமேனிக்கு கருத்துக்களை தெரிவிக்கும் அரச ஊழியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.
கவனம்! கவனம்!
அதேபோல் கடமை நேரத்தில் சமூக ஊடகங்களில் மூழ்கி இருக்கும் அரச ஊழியர்களுக்கு எதிராகவும் நடவடிக்கைகள் எடுக்க புதிய அரசு முயற்சி செய்து வருகிறது.
மேலும் அரச ஊழியர்கள் போலி முகநூலில் தரக் குறைவான விமர்சனம் மற்றும் வேறோருவரின் பெயரில் போலி முகநூலை உருவாக்கி பொய்யான தகவல்களை பரப்புதல் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கும் படி பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
ஆகவே இவ்வாறான போலி முகநூல் தொடர்பாக ஆதாரம் (முகநூல் பதிவுகள்) போலிஸ் மா அதிபருக்கு நேரடியாக அனுப்பி விடுங்கள்.அதன் பிரதியை ஜனாதிபதி செயலகத்திற்கும் அனுப்பி விடுங்கள்.
No comments:
Post a Comment