தேர்தலில் 25% பெண்களின் உரிமையினை உறுதிப்படுத்த வேண்டும்!
தமிழ் தேசிய கட்சிகளை ஒன்றிணைந்து செயற்படமுன்வருமாறு கோரிக்கை விடுத்துள்ள பெண் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பாராளுமன்ற தேர்தலில் 25% பெண்களின் உரிமையினை உறுதிப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளர்.
இன்று (02) மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சிவில் சமூக செயற்பாட்டாளர் மிரேகா நாகேஷ்வரன் மற்றும் மட்டக்களப்பு சிவில் வலையமைப்பின் உறுப்பினர்களான குணரெட்னம் யுனிதா,பிரசாந்தன் பவித்திரா ஆகியோர் கருத்துகளை முன்வைத்தனர்.
வடகிழக்கு மாகாணத்தில் கடந்த காலத்தில் 22 பாராளுமன்ற உறுப்பினர்களைப்பெற்றுக்கொண்டோம். ஆனால் ஒற்றுமையின்மை காரணமாக தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையானது அரைவாசிக்கு மேல் குறைந்துள்ளது.ஒற்றுமையில்லாத நிலையே இதற்கு காரணமாகவுள்ளது.
வடகிழக்கில் உள்ள அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் இணைந்து தமிழர்களுக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்தவேண்டும்.தங்களுக்குள் இருக்கின்ற வேறுபாடுகளை மறந்து இந்த சந்தர்ப்பத்தில் அனைவரும் ஒன்றிணையவேண்டும் என்று கோருகின்றோம்.
அதேபோன்று பாராளுமன்ற தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கையெடுக்கவேண்டும்.கட்சிகள் பேச்சளவிலேயே பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்துபேசுகின்றனர். உளரீதியாக அவர்கள் பெண்களுக்கான பிரதிநித்துவத்தினை வழங்குவதை உறுதிப்படுத்துவதில்லை. வெறுமனே பேச்சளவிலேயே உறுதிகூறுகின்றனர்.
எனவே வடகிழக்கில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியில் பெண்களின் அங்கத்துவத்தினை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.
No comments:
Post a Comment