மன்னார் மாவட்டத்தில் ஏற்பட உள்ள வட கீழ் பருவப் பெயர்ச்சி காலத்தில் ஏற்பட உள்ள அனர்த்தங்களை குறைப்பது தொடர்பில் அவசர கலந்துரையாடல்.
மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை(18) மாலை மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட அனைத்து முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் கே. திலீபன் மற்றும் முப்படையினர், திணைக்கள தலைவர்கள் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
மன்னார் மாவட்டத்தில் ஏற்பட உள்ள வட கீழ் பருவப் பெயர்ச்சி காலத்தில் ஏற்பட உள்ள அனர்த்தங்களை குறைப்பது தொடர்பாகவும் அதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது?அனர்த்தம் ஏற்பட்டால் எவ்வாறு தடுப்பது என்பது குறித்து கலந்துரையாடும் அவசர முன்னாயத்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன் போது மன்னார் மாவட்டம் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகின்ற போது இயற்கை அனர்த்தங்களின் போது பாதிப்புக்கு உள்ளாகும் ஓர் பகுதியாக காணப்படுகின்றமை யின் காரணமாக அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.
மத்தி க்குச் சொந்தமான நீர்ப்பாசன திணைக்களம், பிரதான குளங்களில் நீர் அதிகமாக பெருக்கெடுக்கும் போது ஏற்படுகின்ற ஆபத்துக்களை குறைப்பது சம்மந்தமாகவும்,மாகாண சபைக்கு சொந்தமான நீர்ப்பாசன குளம்,ஆறுகளில் திடீரென ஏற்படுகின்ற வெள்ள நிலையை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தொடர்பாகவும்,மன்னார் மாவட்டத்தில் 165 க்கும் மேற்பட்ட குளங்கள் கமநல அபிவிருத்தி திணைக்களங்களுக்குள் காணப்படுகின்றது.

அந்த குளங்களில் ஏற்படுகின்ற வெள்ள நிலமையை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் குறித்த கலந்துரையாடலில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.
மேலும் மன்னார் மாவட்டத்தில் வெள்ள நிலைமையின் போது மக்கள் இடம் பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்குவதற்கு 30 க்கும் மேற்பட்ட தற்காலிக பாதுகாப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.
அவ்வாறான பாதுகாப்பு நிலையங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும்,கலந்துரையாடப்பட்டது
இதை விட மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ள நிலைமை ஏற்படுகின்ற போது அதை கடலுக்கு வெளியேற்று கின்ற சந்தர்ப்பங்களில் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இதன் போது மன்னார் நகரில் வெள்ளை நீரை கடலுக்குள் செலுத்துவது தொடர்பாகவும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் ஏற்பட உள்ள வட கீழ் பருவப் பெயர்ச்சி காலத்தில் ஏற்பட உள்ள அனர்த்தங்களை குறைப்பது தொடர்பில் அவசர கலந்துரையாடல்.
Reviewed by Author
on
October 19, 2024
Rating:
Reviewed by Author
on
October 19, 2024
Rating:

No comments:
Post a Comment