முன்னாள் ராஜாங்க அமைச்சரின் பிரத்தியாக செயலாளர் சடலமாக மீட்பு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளர் ஒருவரின் சடலம் கண்டி கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அவரது உடலில் துப்பாக்கிச் சூட்டு காயங்கள் காணப்படுவதாகவும், அருகில் துப்பாக்கி ஒன்றும் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி, இது கொலையா அல்லது தற்கொலையா என்பது இதுவரையில் தெரியவரவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கட்டுகஸ்தோட்டை - வரெல்லாகம பிரதேசத்தை சேர்ந்த 49 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ராஜாங்க அமைச்சரின் பிரத்தியாக செயலாளர் சடலமாக மீட்பு
Reviewed by Author
on
October 20, 2024
Rating:

No comments:
Post a Comment