முன்னாள் பெண் போராளிக்கு ஆதரவாக இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டம்
முன்னாள் பெண் போராளியான ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் சங்குச் சின்னத்தில் இலக்கம் 6 இல் வன்னி தேர்தல் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கருணாநிதி யசோதினிஅவர்களுக்கு ஆதரவான தேர்தல் பரப்புரை கூட்டம் இன்று காலை வன்னிவிளாங்குளம் பகுதியில் இடம்பெற்றது
முல்லைத்தீவு மாவட்டத்தின் வன்னிவிளாங்குளம் பகுதியில் போராளிகள் நலன் புரிச்சங்க செயற்பாட்டாளர் கரன் தலைமையில் குறித்த தேர்தல் பரப்புரை கூட்டம் இடம்பெற்றது
வன்னி தேர்தல் மாவட்டத்தின் சங்கு சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் போராளி கருணாநிதி யசோதினி யாழ் மாவட்ட போராளிகள் நலன்புரி சங்கத் தலைவர் ஈஸ்வரன் மற்றும் கவிஞர் மாணிக்கம் ஜெகன் முன்னாள் போராளி ஐங்கரன் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துக்களை வழங்கினர்
முன்னாள் பெண் போராளிக்கு ஆதரவாக இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டம்
Reviewed by Author
on
October 20, 2024
Rating:

No comments:
Post a Comment