மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லூரி மாணவி தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் இரண்டாம் இடம்
கல்வி அமைச்சினால் நடாத்தப் பட்ட தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் பிரிவு 8/9 மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லூரி மாணவி நயோலின் அபிறியானா அன்ரோனியோ குபேரக்குமார் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.
இவர் யாழ் இந்து கல்லூரியில் நடைபெற்ற மாகாண மட்ட போட்டியில் முதலாம் இடத்தினையும்,மகரகம ஜனாதிபதி கல்லூரியில் 3/8/2024 ல் நடைபெற்ற தேசிய மட்ட போட்டியில் இரண்டாம் இடத்தினை யும் பெற்று வரலாற்று சாதனையினை எமது மாவட்டத்திற்கும்,மாகாணத்திற்கும்,பெருமையை பெற்றுத்தந்துள்ளார்.
இவர் 2018 ம் ஆண்டு தேசிய மட்டத்தில் நடைபெற்ற English Resitation போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
Reviewed by Author
on
October 15, 2024
Rating:




No comments:
Post a Comment