இலங்கை அணிக்கு இமாலய வெற்றி!
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி20 போட்டியில் இலங்கை அணி 73 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் பெத்தும் நிஸ்ஸங்க அதிகபட்சமாக 54 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் Romario Shepherd அதிகபட்சமாக இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
அதன்படி, 163 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மே.தீவுகள் அணி 16.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 89 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.
அவ்வணி சார்பில் அணித்தலைவர் Rovman Powell அதிகபட்சமாக 20 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் துனித் வெல்லாலகே மூன்று விக்கெட்டுக்களையும், மஹீஷ் தீக்ஷன, சரித் ஹசலங்க மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இதற்கமைய, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை மற்றும் மே.தீவுகள் அணிகள் தலா ஒரு வெற்றிகளை பெற்று 1 - 1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.
Reviewed by Author
on
October 15, 2024
Rating:


No comments:
Post a Comment