மன்னாரிற்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய விஜயம்-பலத்த பாதுகாப்பு
பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்றைய தினம் திங்கட்கிழமை(4) காலை 11 மணியளவில் மன்னாருக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு வருகை தந்தார்.
பாராளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை ஆதரித்து மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இதன் போது தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி)கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் கலந்து கொண்டார்.
-மேலும் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் உள்ளடங்களாக சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
பிரதமரின் வருகையை ஒட்டி மன்னார் நகர பகுதியில் பலத்த பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டது.மேலும் மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்ற மக்கள் கடுமையான உடல் சோதனைக்கு உற் படுத்தப்பட்டனர்.

1 comment:
பிரதமருக்கான பாதுகாப்பு அரசாங்கம் தான் வழங்குகிறது. பொதுமக்கள் கடுமையான உடல் சோதனை கொடுத்தப்பட்டார்கள் என்ற பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம். ஊடகச் சுதந்திரம் இருப்பதற்காக பக்க சார்பான விடயங்களை பதிவிடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
Post a Comment