அண்மைய செய்திகள்

recent
-

மக்கள் தமது நிலையான பொருளாதார அபிவிருத்தியை மட்டுமே சிந்திக்க வேண்டும்.-கோடாரி சின்னத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் எமில் காந்தன்.

இடம்பெற உள்ள பாராளுமன்ற தேர்தலானது வன்னி மாவட்ட மக்களின் மாற்றத்தை நோக்கிய தொன்றாக  காணப்படுவதாக வன்னி தேர்தல் களத்தில் புதிய மாற்றத்தை வேண்டி கோடாரி சின்னத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் எமில் காந்தன்  தெரிவித்துள்ளார்.

-மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(3) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

-மாற்றத்தை நோக்கி மக்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.இச் சந்தர்ப்பத்தில் பல்வேறு தரப்பினர் தமது தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.


நாங்களும் எமது கோடாரி சின்னத்திற்கான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறோம்.நாங்கள் எமது பிரச்சாரத்தின் போது பிர கட்சிகளையோ, அல்லது அக்கட்சிகளின் வேட்பாளர் களையோ விமர்சிப்பது இல்லை.ஆனால் இன்று சில கட்சிகள் தமது மக்கள் சந்திப்புக்களின் போது யாருக்கும் வாக்களித்தாலும் பரவாயில்லை கோடாரி சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டாம் என்று கூறுகிறார்கள்.

என்னையும்,எனது சக வேட்பாளர்களையும் தனிப்பட்ட முறையில் விமர்சித்து வருகின்றனர்.நாங்கள் அரசியல் செய்வது மக்களுக்காக.மக்களின் நலனுக்காக.அரசியல் என்பது ஒரு சேவை.அந்த சேவையை செய்ய மக்களை சிந்திப்பதற்கான ஒரு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும்.

மக்களை குழப்ப கூடாது.மக்கள் தமது நிலையான பொருளாதார அபிவிருத்தியை மட்டுமே சிந்திக்க வேண்டும்.

மக்கள் அதனையே கருத்தில் எடுத்துள்ளனர்.நிலையான அபிவிருத்தியை பற்றி மக்கள் சிந்தித்துக் கொண்டு இருக்கின்ற நிலையில்,வெறும் வாக்கு அரசியலுக்கு மாத்திரம் மக்களை நாடினால் அது மக்கள் பணி அல்ல என தெரிவித்தார்.





மக்கள் தமது நிலையான பொருளாதார அபிவிருத்தியை மட்டுமே சிந்திக்க வேண்டும்.-கோடாரி சின்னத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் எமில் காந்தன். Reviewed by Author on November 03, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.