அண்மைய செய்திகள்

  
-

சிவமோகனின் குற்றப்பத்திரிகையை வாங்க மறுத்த சுமந்திரன்!

 வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் செயலாளர் ப. சத்தியலிங்கம் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையின் பிரதியை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் வழங்கமுற்ப்பட்ட போது அதனை சுமந்திரன் வாங்க மறுத்துள்ளார்.

தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று இடம்பெற்றது.

இதன்போது கட்சியின் செயலாளரின் பொறுப்பற்ற  தான்தோன்றித்தனமான செயற்பாடுகளால் கட்சியின் கூட்டுப்பொறுப்பு உருக்குலைக்கப்பட்டதாகவும் அதனை விசாரணை செய்யுமாறு கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனால் கட்சியின் பதில் செயலாளருக்கு எதிராக குற்றப்பத்திரிகை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. 

குறித்த குற்றப்பத்திரிகையின் பிரதியை நேற்றைய கூட்டத்திற்கு வருகைதந்த அனைவருக்கும் சிவமோகன் வழங்கியிருந்தார்.

இந்நிலையில் சுமந்திரனுக்கும் அதனை வழங்க முற்ப்பட்ட போது அவர் அதனை பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டுச்சென்றார். 

குறித்த குற்றப்பத்திரிகையில், கட்சி மாநாட்டுக்கு முன்னர் ஆலோசனைக்கூட்டம் நடாத்தாமை, சுகயீனம் எனக்கூறி பொதுக்குழு கூட்டத்திற்குவராமை, யாப்பிற்கு முரணாக தேர்தல் நியமனக்குழுவை நியமித்தமை, கட்சி உருக்குலைய காரணமாக இருந்தமை, முல்லைத்தீவு மாவட்டக்குழுவின் ஆலோசனை இன்றிதேர்தல் நியமனங்களை வழங்கியமை போன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இது தொடர்பாக கருத்து தெரிவித்த சிவமோகன்…

தோற்றவர்கள் பாராளுமன்ற தேர்தல் கேட்ககூடாது என்று சொன்னவர் யார். அப்படி ஒரு முடிவு கட்சி எடுக்கவில்லை. கட்சி எடுக்காத முடிவை கட்சியின் பேச்சாளர் என்ற போர்வையில் உட்புகுத்த கூடாது. 

முஸ்லீம்களை புலிகள் இனச்சுத்திகரிப்பு செய்தார்கள் என்ற அவரது கருத்து தமிழரசுக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்ப்படுத்தியது. 

அது கட்சி எடுத்த முடிவா இல்லையே. போரை நீங்கள் ஏற்கவில்லை. நீங்கள் கொழும்பில் இருந்தீர்கள் நாங்கள் இந்த மண்ணில் இருந்தோம். அதை ஏற்ப்பதா இல்லையா என்று நாங்களே தீர்மானிக்க வேண்டும். அதை நீங்கள் சொல்லத்தேவையில்லை. 

தோற்றவர்கள் கேட்க கூடாது என்று கூறிவிட்டு தேசியபட்டியல் கொடுப்பதற்கு இனி இங்குபோராட்டம் நடக்கும். நான் எடுக்கமாட்டேன் என்று சொல்லி அவரும். நீங்கள் எடுங்கோ என்று எங்கட ஆக்கள் சொல்லி சிலநேரம் கொடுக்கப்படலாம். அது பிழை. படுதோல்வியடைந்த சுமந்திரன் மற்றும் தமிழரசுக்கட்சியை உருக்குலைத்த சத்தியலிங்கம் ஆகியோர் தாங்களாகவே பதவிகளில் இருந்து விலகிகொள்ள வேண்டும்.

தேசியபட்டியல் ஆசனத்தை வன்னிக்கு கொடுக்க வேண்டும் என்றால் அது இரண்டாவது விருப்பு வாக்கை எடுத்தவருகே கொடுக்க வேண்டும் என்றார்



.

சிவமோகனின் குற்றப்பத்திரிகையை வாங்க மறுத்த சுமந்திரன்! Reviewed by Author on November 18, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.