அண்மைய செய்திகள்

recent
-

மற்றும் ஒரு அமைச்சரின் போலி கலாநிதி பட்டம் தொடர்பில் வெளி வந்த விடயம்

 நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் அருண கருணாதிலகவும் ‘கலாநிதி’ என குறிப்பிடப்பிட்டு வந்த நிலையில், அவ்வாறான தகுதிகள் அவருக்கு இல்லை என்பது தெரியவந்த நிலையில், அந்தச் சொல் தற்போது நாடாளுமன்ற இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.


 இலங்கை முன்னாள் சபாநாயகர் அசோக சப்புமல் ரன்வலவின் கலாநிதிப் பட்டம் போலி என்பது தெரியவந்ததனால் அது தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து அவர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.



இந் நிலையில், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் அருண கருணாதிலகவும் ‘கலாநிதி’ என குறிப்பிடப்பிட்டு வந்த நிலையில், அவ்வாறான தகுதிகள் அவருக்கு இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


போலி ‘கலாநிதி’ பட்டம்

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் அருண கருணாதிலகவும் ‘கலாநிதி’ என குறிப்பிடப்பிட்டு வந்த நிலையில், அவ்வாறான தகுதிகள் அவருக்கு இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக சபைத் தலைவர் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ கடிதங்களில் நீதி அமைச்சர் ‘டொக்டர்’ என்ற பட்டத்துடன் குறிப்பிடப்பட்டிருந்தார், ஆனால் அந்தச் சொல் தற்போது நாடாளுமன்ற இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னாள் இருந்த கலாநிதி எனும் சொல்லும் நாடாளுமன்ற இணையத்தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.


இதனையடுத்து தேசிய மக்கள் சக்தி சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட கல்வியாளர்கள், பொதுமக்களை ஏமாற்றுவதற்காக இவ்வாறான போலியான தலைப்புகளைப் பயன்படுத்தியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன



.   


மற்றும் ஒரு அமைச்சரின் போலி கலாநிதி பட்டம் தொடர்பில் வெளி வந்த விடயம் Reviewed by Author on December 14, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.