மஹிந்தவை கொலை செய்ய சாதகமான சூழல் அனுரா மீது குற்றச்சாட்டு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கொலை செய்வதற்கு சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவா 116 பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் சேவையில் இருந்து மீளழைக்கப்பட்டுள்ளார்கள் என சந்தேகம் எழுவதாக பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் சட்டத்தரணி மனோஜ் கமகே குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், அரசியல் பழிவாங்களுக்காகவே பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு மனோஜ் கமகே குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“நாட்டில் பல பிரச்சினைகள் காணப்படுகின்ற நிலையில் அப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பினை அரசாங்கம் சடுதியாக குறைத்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நிமித்தம் சேவையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்களில் 116 பேர் சேவையில் இருந்து மீளழைக்கப்பட்டுள்ளனர்.
விடுதலை புலிகள் காலத்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டிருந்தவர்கள் இவ்வாறு சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த செயற்பாடு மகிந்த ராஜபக்சவை படுகொலை செய்வதற்காவா அவரது பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது? என்ற சந்தேகம் எழுகிறது” என்றார்
Reviewed by Author
on
December 14, 2024
Rating:


No comments:
Post a Comment