நாய்கள் சாப்பிட்ட நிலையில் மீட்கப்பட்டிருக்கும் குழந்தையின் கால் வெளிவந்திருக்கும் அதிர்ச்சி சம்பவம்
புத்தளம் - சிலாபம் கடற்கரையில் உள்ள சுற்றுலா ஹோட்டலுக்கு அருகில் நாய்கள் சாப்பிட்டதாக கருதப்படும் குழந்தையின் கால் ஒன்றை கண்டுபிடித்த பிரதேசவாசிகள், பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றதாக செய்தி வெளியாகியுள்ளது.
அண்மைக்காலமாக சிலாபத்தை சுற்றுவட்டாரத்தில் குழந்தையொன்று உயிரிழந்தாகவோ அல்லது புதைக்கப்பட்டதாகவோ இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் சிலாபம் பொது வைத்தியசாலையிலும் அவ்வாறான குழந்தை மரணம் குறித்த தகவல் எதுவும் பதிவாகவில்லை எனவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த குழந்தையின் காலை நாய் எங்கிருந்து கொண்டு வந்தது என சிலாபம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன
நாய்கள் சாப்பிட்ட நிலையில் மீட்கப்பட்டிருக்கும் குழந்தையின் கால் வெளிவந்திருக்கும் அதிர்ச்சி சம்பவம்
Reviewed by Author
on
December 03, 2024
Rating:

No comments:
Post a Comment