அண்மைய செய்திகள்

recent
-

இந்தியாவின் புதுடில்லியில் நடைபெற்ற U.C.M.A.S சர்வதேச மட்டப் போட்டியில் மன்னார் மாணவர்கள் சாதனை.

 இந்தியாவின் புதுடில்லியில் நேற்று (14) சனிக்கிழமை நடைபெற்ற யூசி மாஸ் (U.C.M.A.S)சர்வதேச மட்டப் போட்டியில் இலங்கையிலிருந்து 103 மாணவர்கள் கலந்து கொண்டனர்.


இவர்களில் மன்னார் யூசி மாஸ் கல்வி நிறுவனத்தில் கல்வி பயிலும் 6 மாணவர்களும் பங்குபற்றி வெற்றி கிண்ணங்களைப் பெற்று மன்னார் மாவட்டத்திற்கும் இலங்கைக்கும் பெருமையைச் சேர்த்துள்ளனர்.


  அந்த வகையில்  மன்னார் தோட்டவெளி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவி ராஜநாயகம் ரியானா      1st runner up,  ஜக்கேயு ரெறா ஜெசாறி ( டிலாசால் ஆங்கிலப் பாடசாலை) - 1st runner up, குணசேகரன் ஆருஷன் ( டிலாசால் ஆங்கிலப் பாடசாலை) - 2nd runner up, செலமியா தேசுரா வின்சன்ட் ( டிலாசால் ஆங்கிலப் பாடசாலை) - 2nd runner up, வின்சன்ட் செஸான் ஜெத்னியல் (புனித சேவியர் ஆண்கள் தேசிய பாடசாலை) - 3rd runner up, செல்வக்குமரன் மேரி எய்மீ (புனித சேவியர் பெண்கள் தேசிய பாடசாலை) - 3rd runner up ஆகிய வெற்றிக் கிண்ணங்களைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளார்கள்.


அத்துடன், வின்சன்ட் செஸான் ஜெத்னியல் என்ற மாணவன் அங்கு நடைபெற்ற யூசி மாஸ் உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை சார்பாக கலந்து கொண்ட நால்வர் கொண்ட அணிக்குத் தலைமை தாங்கி இலங்கைக்கு வெண்கலப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்துள்ளார்.  


இவர்கள் அனைவரும் மன்னார் யூசி மாஸ் நிறுவனத்தின் நிர்வாகி நடராஜா கேதீஸ்வரன் மற்றும் ஆசிரியர் யசோதா கேதீஸ்வரன் ஆகியோரின் வழிகாட்டலில் இச்சாதனையை படைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது






.

இந்தியாவின் புதுடில்லியில் நடைபெற்ற U.C.M.A.S சர்வதேச மட்டப் போட்டியில் மன்னார் மாணவர்கள் சாதனை. Reviewed by Author on December 15, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.