சமூக ஊடகங்களால் சிறுவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து
சமூக ஊடகங்களின் பயன்பாடு சிறுவர் தற்கொலைகள் அதிகரிப்பதற்கு வழிவகுத்துள்ளதாக இலங்கை சிவில் வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் 200இற்கும் மேற்பட்ட குழந்தைகள் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அதன் தலைவர் விசேட மருத்துவர் கபில ஜயரத்ன தெரிவித்தார்.
"2022 ஆம் ஆண்டில், 18 வயதுக்குட்பட்ட 133 சிறுவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். அதிகாரப்பூர்வமற்ற தரவுகளின் படி, கடந்த ஆண்டு 270 சிறுவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவை அனைத்திற்கும் பல்வேறு காரணங்கள் உள்ளன. சமூக ஊடகங்களை தடை செய்வதே இவற்றை தடுக்க எம்மால் இயன்ற முதலாவது செயற்பாடாகும். ஒரு நாடாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அடுத்த வாரம் அல்லது இரண்டு வாரங்களில் இது குறித்த தகவல்களை வெளியிட எதிர்பார்க்கிறோம். குழந்தைகளுக்காக சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதில் நன்மைகள் மற்றும் தீமைகள் இரண்டும் உள்ளன. இதை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்த பரிந்துரைகளை வழங்கலாம் என எதிர்பார்க்கிறோம்"
Reviewed by Author
on
January 31, 2025
Rating:


No comments:
Post a Comment