அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் உத்தரவு

  இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று வெள்ளிக்கிழமை (31)  உத்தரவிட்டார்.


 

 இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்கள் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி (24.12.2024) செவ்வாய்க்கிழமை  அதிகாலை தலை மன்னார் கடற்படையினரால் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.


குறித்த மீனவர்களின் வழக்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (24) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே மன்னார் மாவட்ட நீதிமன்ற நீதவான் அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு  உத்தரவிட்டுள்ளார்.


கடந்த 24.12.2024 அன்று   கைது செய்யப்பட்ட 17 மீனவர்களும் தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு முதல் கட்ட விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தில் ஒப்படைக்க பட்டிருந்தனர்.


கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணையின் பின்னர் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் 17 சந்தேக நபர்களையும் ஆஜர்படுத்திய நிலையில்  தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் உத்தரவிட்டார்.



 இந்த நிலையில் மீண்டும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(31) குறித்த 17 மீனவர்களையும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த மீனவர்களை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை   (07.02.2025) விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்


  குறித்த மீனவர்கள்  தலைமன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத இழுவை மடி வலைகளை பயன்படுத்தி   மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் இரண்டு ரோலர் படகுகள் உட்பட அதில் மீன்பிடியில் ஈடுபட்ட 17 மீனவர்களையும் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





தலைமன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் உத்தரவு Reviewed by Author on January 31, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.