அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவில் நடந்த பயங்கரம் - ஒருவர் படுகாயம்

 முல்லைத்தீவு கூழாமுறிப்பு பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமுற்று மாஞ்சோலை வைத்தியசாலையில் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று புதன்கிழமை (08) மாலை நடைபெற்றுள்ளது.


ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பினை சேர்ந்த 46 வயதுடைய குடும்பஸ்தரே படுகாயமடைந்துள்ளார். 


முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு பகுதியில் அக்காவின் கணவருக்கும் தம்பிக்கும் இடையில் ஏற்பட்ட மனகசப்பு கைக்கலப்பாக மாறியுள்ளது. 


அதனையடுத்து, கோபடைந்த தம்பி கத்தியால் அத்தானை வெட்டியுள்ளார். அது பலனளிக்காத நிலையில் காட்டுக்குள் சென்று இரு இடியன் துப்பாக்கிகளை எடுத்து வந்து தனது அக்காவின் கணவருக்கு சுட்டுள்ளார். இதன்போது படுகாயமடைந்த அக்காவின் கணவர் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.


குறித்த சம்பவத்தை நடாத்திய 24 வயதுடைய சந்தேகநபர் சுட்டுவிட்டு தலைமறைவாகியுள்ளார்.   


சந்தேகநபரை கைது செய்யும் நடவடிக்கையில் ஒட்டுசுட்டான் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.




முல்லைத்தீவில் நடந்த பயங்கரம் - ஒருவர் படுகாயம் Reviewed by Author on January 09, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.