அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் மேய்ச்சல் தரை இன்றி இறந்து போகும் கால்நடைகள்

 மன்னார் மாவட்டத்தில் மாந்தை மற்றும் நானாட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேய்ச்சல் தரை பிரச்சினை நீண்ட நாட்களாக இடம்பெற்று வருகின்ற நிலையில் அண்மை காலமாக அதிகளவான கால்நடைகள் மேய்ச்சல் தரை இன்றி இறந்து போயுள்ளது.


குறிப்பாக மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நாயாற்று வெளி பகுதியில் அதிகளவான கால்நடைகள் மேய்ப்பதற்காக கொண்டு செல்லப்படுகின்ற நிலையில் சீரற்ற காலநிலை அதிக பணி காரணமாக அதிகளவான மாடுகள் இறந்துள்ளன.


 அதே நேரம் அதிகளவான மாடுகள் ஒரே பகுதிகளில் மேய்வதால் பட்டினியால் உடல் மெலிந்து மாடுகள் இறந்துள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.


இவ்வாறான நிலையில் வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் கால்நடை மேய்பாளர்கள் பல்வேறு இழப்புக்களை எதிர்கொண்டு வருகின்றனர்.


இருப்பினும் மன்னார் மாவட்ட செயலகத்தினால் மேய்ச்சல் தரைக்கு என பல வருடங்களுக்கு முன் ஒதுக்கப்பட்ட பல ஏக்கர் காணிகள் பல்வேறு அரச திணைக்களங்களினால் இதுவரை மேய்ச்சல் த ரைக்கு விடுவிக்க படாத நிலையில் பொறுத்தமற்ற இடங்களில் மேய்ச்சல் நடவடிக்கைகளுக்கு மாடுகளை கொண்டு செல்வதால் இவ்வாறன மரணங்கள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




மன்னார் மாவட்டத்தில் மேய்ச்சல் தரை இன்றி இறந்து போகும் கால்நடைகள் Reviewed by Author on February 06, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.